அ.தி.மு.க., ஆட்சியை அகற்றுவோம் - சேலத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி

சேலம்: அ.தி.மு.க ஆட்சியை அகற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம்: அ.தி.மு.க ஆட்சியை அகற்றும் வரையில் போராட்டம் தொடரும் என்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். 

அ.தி.மு.க அரசைக் கண்டித்து சென்னை, சேலம் உள்பட தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சேலத்தில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

சேலத்தில் இன்று நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவர், "அதில் அவர் பேசியதாவது, மனித உரிமைகளை தமிழக அரசு அடகு வைத்துள்ளது. தமிழக மக்கள் பார்க்காத ஊழல்களை அ.தி.மு.க., அரசு செய்து வருகிறது. மக்கள் மீது அரசு நேரடி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. தமிழகத்தில் இருக்கும் ஆட்சியை அகற்றும் வரை எனது போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தற்போது இருக்கும் அரசு பதவி விலக வேண்டும் என அரசியல்வாதிகள் மட்டுமல்ல மக்களும் நினைக்கிறார்கள் ஊழல் ஆட்சிக்கு முடிவு கட்ட தயாராக இருக்க வேண்டும். 33 அமைச்சர்கள் ஊழல் செய்துள்ளனர். ஊழலின் கதாநாயகன் எடப்பாடி பழனிசாமி தான். அவரது அமைச்சர்கள் அதன் கூட்டாளிகள்.

சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்றனர். ஆனால், சேலம் மாவட்டத்தை நான் விருப்பப்பட்டுத் தேர்வு செய்தேன். சேலத்திற்கு எதிராக அரசு காய் நகர்த்தி வருகிறது. விவசாய நிலங்களை அழிக்கப் பார்க்கிறது. ஊழல் செய்வதில் யார் சிறந்தவர் என்று போட்டி வைத்தால் எல்லா அ.தி.மு.க.,வினரும் முன்னிலையில் இருப்பார்கள்.

நான் ஆதாரத்துடன் தான் பேசுகிறேன். நான் கருணாநிதியின் மகன். தைரியம் இருந்தால், நான் பேசியதில் தவறு என்றால் வழக்கு போடட்டும். அவர்களால் போட முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவர்கள் மீது உள்ள வழக்குகளை எதிர்கொள்ளவே நேரம் இல்லை. அதற்காக நீதிமன்றம் போகவே நேரம் இல்லை." என்றார்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...