நீலகிரி : குன்னூர் அருகே காட்டெருமை தாக்கியதில் பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 4 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

குன்னூர் அருகே குந்தா வனச்சரகத்திற்குட்பட்ட மேல் சட்டன் கிராமத்தைச் சேர்ந்த பாலன் என்பவரது மகன் சுகாசினி (15) மற்றும் செல்லதுரை மனைவி கலாராணி ஆகியோரின் மகள்கள் வைஷ்ணவி (15), கவிவர்சா (14), சுபாஸ்ரீ (11) ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி முடிந்து பேருந்து மூலம் அவர்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சட்டன் கைகாட்டியில் இருந்து மேல் சட்டனுக்கு தேயிலை தோட்டத்தின் வழியாக நடந்து வந்துள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் கன்றை ஈன்ற காட்டெருமை ஒன்று அப்பகுதியில் யாரையும் வரவிடாமல் விரட்டியுள்ளது. அலறியடித்துக் கொண்டு ஓடி மாணவிகள் 4 பேரையும் முட்டித் தூக்கி வீசியுள்ளது. இதில், அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து சட்டன் எஸ்டேட் மருத்துவமனையில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு குன்னூர் வனச்சரகர் பெரியசாமி, குந்தா வனச்சரகர் சரவணன் ஆகியோர் உத்தரவின் பேரில் வனத்துறையினர் உடனடியாக சென்று படுகாயமடைந்த மாணவிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். வனத்துறையினர் காட்டெருமைகளை பள்ளி விடும் நேரங்களில் கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.