திண்டுக்கல் : ஜல்லிக்கட்டுக்காக மெரீனாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது மது, மாது மற்றும் பீஃப் ஆறாக ஓடியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா மீண்டும் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார்.

தனது வழக்கமான சர்ச்சை பேச்சை எச்.ராஜா விடுவதாய் இல்லை. புதுக்கோட்டையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, உயர்நீதிமன்றம் மற்றும் காவல்துறை குறித்து கடுமையாக சாடிப்பேசினார். இதனைத் தொடர்ந்து, அவரை கைது செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், நேற்று திண்டுக்கல்லில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட அவர் மீண்டும் தனக்கே உரித்தான சர்ச்சை பேச்சை தொடங்கினார். மேடையில் அவர் பேசுகையில், மெரீனா போராட்டத்தின் போது மது மாது பீஃப் ஆறாக ஓடியதை தகவல் மூலமாக தான் அறிந்ததாகக் கொச்சையாக பேசினார்.
மேலும், அந்த தகவலை கொடுத்தவர் தனது அமைப்பைச் சேர்ந்த ஒரு பெண் என்றும், அவர் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ-சர்ட் அணிந்திருந்த காரணத்தினால் மட்டுமே போராட்டத்திற்கு அனுமதிக்கப்பட்டதாகவும் கூசாமல் பேசினார்.
அவரது இந்த பேச்சு உரிமைக்காகப் போராடிய மக்களையும், மாணவர்களையும் காயப்படுத்தும் வகையில் இருப்பதாகவும், இது போன்ற பேச்சுக்களைத் தொடர்ந்து பேசி வரும் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையிலடைக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.