கோவை: கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாநகராட்சியில் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட குடிநீர் விநியோக உரிமையை ரத்து செய்யக்கோரி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்பினர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கோவை அரசினர் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகேயுள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி..ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், "கோவை மாநகராட்சி குடிநீரை வியாபாரம் செய்ய சூயஸ் நிறுவனத்திற்கு தாரை வார்த்துள்ளதால், 1,500 பொதுக்குழாய்கள் மூடப்படுவதோடு, குடிநீர் இணைப்பு கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குடிநீர் கட்டணத்தை அரசே நிர்ணயிக்குமென மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறுகிறது. ஒப்பந்தப்படி சூயஸ் நிறுவனம் வலியுறுத்தினால் கட்டணம் அதிகரிக்கும், சூயஸ் நிறுவனத்தை விரட்டும் வரை போராட்டம் தொடரும்." என்றார்.

மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் கோவை மாநகராட்சி மற்றும் சூயஸ் நிறுவனத்தை எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பியதோடு, சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதையடுத்து பாலசுந்தரம் சாலையில் மறியலில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 326 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், சிங்காநல்லூர், குனியமுத்தூர், ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாதர் சங்கம், வாலிபர் சங்கம், சி.ஐ.டி.யு, ஆட்டோ தொழிலாளர் சங்கம், கட்டிடத் தொழிலாளர் சங்கம், மலர் தொழிலாளர்கள் சங்கம், தங்கநகை தொழிலாளர் சங்கம், டாஸ்மாக் ஊழியர் சங்கம், கை வண்டி மற்றும் சுமைப்பணி தொழிலாளர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.