திருப்பூர் : உடுமலை அருகே கழிவு நீா் கலந்து வந்த குடிநீரை குடித்ததால் குழந்தைகள் வாந்தி, மயக்கம் எடுத்த நிலையில், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கொழுமத்தில் நேற்றிரவு ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் திறக்கப்பட்டது. அப்போது குடிநீரில் கழிவு நீர் கலந்து வந்துள்ளது. இரவு நேரம் என்பதால் அதை கவனிக்காமல் பெரும்பாலான மக்கள் குடித்துள்ளனர்.

இதனால், நள்ளிரவில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வாந்தி, மயக்கம் எடுத்தனர். தொடர்ந்து, அவர்கள் குமரலிங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இன்று காலையில் வீட்டில் பிடித்து வைக்கப்பட்ட குடிநீரில் கழிவு நீா் கலந்திருப்பதை கண்ட பொதுமக்கள் 500-க்கும் மேற்பட்டோர், அரசு மற்றும் தனியார் பேருந்துகளைச் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் மற்றும் ஊராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் ஏற்காத பொதுமக்கள், தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை அப்புறப்படுத்தி சுத்தமான குடிநீர் வழங்கும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக கூறியதை தொடர்ந்து, மடத்துக்குளம் தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் அதிகாரிகளிடம் உடனடியாக கழிவுநீரை அப்புறப்படுத்தி குடிநீர் வழங்க உத்தரவிட்டார். சட்டமன்ற உறுப்பினர் உறுதியை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து கழிவு நீர் குழாய்களை ஊராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.