கோவை: ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன் கோவை அவினாசி சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சுமி மில்ஸ் பகுதியில் இருக்கும் டிரைஸ் ஸ்டார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் முத்துவீரன்(68). ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான இவர் கோவை மாநகராட்சி ஆணையராகவும், தேனி மாவட்ட ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார். இவரது மகன் பிரேனஷ்பாபு.
தனியார் ஐ.ஏ.எஸ் அகாடமியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெற்று வருகிறார். இவர் தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம். இந்த நிலையில், வழக்கம் போல உடற்பயிற்சி செய்வதற்காக காலை சுமார் 4.30 மணி அளவில் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வெளியே கிளம்பினார். பின்னர் லட்சுமி மில்ஸ் சாலையை கடக்கும்போது பெங்களூரில் இருந்து வந்த கார் அவர் மீது மோதியது.
இந்த விபத்தில் பிரனேஷ் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.