சென்னை: உயர் நீதிமன்றம் குறித்து தரக்குறைவான முன்வைத்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது போலீஸ் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராகவும், தரக்குறைவாக விமர்சித்தும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா எச்.ராஜா கடுமையாக சாடிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, திருமயம் காவல் நிலையத்தில் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர் மீது நடவடிக்கை வேண்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. மனுவின் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. மேலும், எச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், வழக்கறிஞர் சூர்ய பிரகாஷ் என்பவர் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவிட முடியாது என்று கூறியுள்ளது.