கோவை: கோவை-பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் இன்று 85வது பிறந்தநாள் கொண்டாடுகிறது.
கோவை: கோவை-பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள சுந்தராபுரம் இன்று 85வது பிறந்தநாள் கொண்டாடுகிறது.
கடந்த 1934ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் நாள் கோவையில் சுந்தராபுரம் என்ற ஊர் உருவானது. இந்த ஊரை ஏ.டி. தேவராஜ் மற்றும் சுந்தராபாய் தம்பதியினர் உருவாக்கினர். முன்னதாக திருமூர்த்தி கோவில், ஆதிலட்சுமி தொடக்கப்பள்ளி மற்றும் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு வளாகம் போன்றவையே சுந்தராபுரம் என்று அழைக்கப்பட்டன.
நாள்பட இந்த ஊர் தனது எல்லைகளை விரிவுபடுத்தி பலரது வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கி வருகிறது. இதற்கு சான்றாக திருமூர்த்தி கோவில் வளாகத்தின் முன்புறம், பொள்ளாச்சி சாலையில் இரண்டு தூண்கள் உள்ளன.
சுந்தராபுரம் தினத்தை முன்னிட்டு அப்பகுதி மக்கள் சார்பாக சுந்தர கணேசருக்கு மகா அபிஷேகம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தீபாராதனை மற்றும் மகா அபிஷேகத்திற்கு கோவை மக்களை வரவேற்றுள்ளனர் சுந்தராபுரம் பகுதி மக்கள்.