திருப்பூர் : திருப்பூரில் பெரியார் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட விளம்பர பதாகைக்கு இந்து முன்னனியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவற்றை போலிசார் அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த தினம் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் கங்கா நகர் பகுதியில் திருவள்ளுவர் பேரவை சார்பில் தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகிற வகையில் வாழ்த்து வாக்கியங்கள் மட்டுமல்லாது பெரியாரின் பகுத்தறிவு பொன்மொழியான மதவெறி - சாதிவெறி தவிர்ப்போ என வாசகங்கள் அச்சிடப்பட்டிருந்தன.

இந்த பதாகைக்கு அப்பகுதியில் இருந்த இந்து முன்னனியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு பெரியாரை இகழ்ந்து கண்டன கோஷங்களும் எழுப்பினர். இதனையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து போலிசார் திருவள்ளுவர் பேரவையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பதாகையினை அகற்றினர். இதன்பின்பே இந்து முன்னனியினர் அப்பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.