பழங்குடியினத்தவர்களை தாக்கி வீண்பழி சுமத்தும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை

கோவை : ஆனைமலையில் சிறுத்தையை வேட்டையாடியதாக ஒப்புக் கொள்ளுமாறு பழங்குடியின மக்களை தாக்கி வீண்பழி சுமத்தும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை : ஆனைமலையில் சிறுத்தையை வேட்டையாடியதாக ஒப்புக் கொள்ளுமாறு பழங்குடியின மக்களை தாக்கி வீண்பழி சுமத்தும் வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- பொள்ளாட்சி வனச்சரகத்திற்குட்பட்ட ஆனைமலை வனப்பகுதியில் சிறுத்தையின் சடலத்தை கைப்பற்றிய வனத்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை என்ற பெயரில் பந்தகாலன்பதி, ஜெ,ஜெ.நகர், நரிக்கலபதி ஆகிய பழங்குடியின மக்கள் குடியிருப்பு வீடுகளில் புகுந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் பொருட்களை நாசம் செய்தும் பழங்குடி மக்களை அழைத்து சென்று அடித்து தாக்கியும், ஊசி போட்டு துன்புறுத்தியும் கொடுமைப்படுத்தியும், குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்பிக்க வைத்திட பழங்குடி மக்களை வீண்பழியில் சிக்க வைப்பதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வனத்துறையினரின் இக்கொடுஞ் செயலை மார்கசிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. 

இச்சம்பவத்தில் வனத்துறையால் தாக்கப்பட்டு வேட்டைகாரன்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை வனத்துறையினர் வெளியேற்ற நிர்பந்தம் செய்தும், மருத்துவமனையை விட்டு வெளியேற்றியும், வனத்துறையால் ஊசி போடப்பட்ட பழங்குடி மக்களை ரத்த பரிசோதனைக்கு அனுப்பாமல் முழுசிகிச்சை அளிக்காமல் வெளியேற்றியது கொடுர நிகழ்வாகும். 

வனத்துறையில் தாக்கப்பட்ட 7 பேர் ஆழியார் காவல்நிலையத்தில் புகார் அளித்த போது, ஒருவரிடம் மட்டும் விசாரித்து சி.எஸ்.ஆர்., போட்டுள்ளனர். அதிலும், பாரபட்சமாகப் பழங்குடியின மக்களை தாக்கிய வனத்துறையினரை தப்பிக்க வைக்கக் கூடிய வகையில் விசாரணை அறிக்கை  சி.எஸ்.ஆர்., தயாரித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

ஆகவே, பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தாக்குதல் நடத்தியும் கெட்ட வார்த்தைகளில் பேசி துன்புறுத்திய வனத்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுத்திடவும், சிறுத்தையை வேட்டையாடிய உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க பழங்குடி மக்கள் மீது விண்பழி சுமத்துவதை உடனே நிறுத்தக் கோரியும், ஆனைமலை வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள ரிசார்ட், தங்கும் விடுதிகளுக்கு வந்து சென்றவர்களை கண்டறிந்து விசாரித்திடவும், இது குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைத்து உரிய விசாரணை நடத்திட வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...