திருப்பூர் : நொய்யலாற்றின் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில் காட்சியளிப்பதால், ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு நீர் கலக்கப்படுகின்றதா..? என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

திருப்பூர் நொய்யலாற்றில் கடந்த சில ஆண்டுகளாக சாயக்கழிவு நீர் கலந்ததால், ஆற்று நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும், நொய்யல் கரையோரப் பகுதி கால்நடைகளுக்கு முக்கிய நீராதாரமாக இருந்து வருகிறது. மேலும், தற்போது நொய்யலாற்று தண்ணீரின் டி.டி.எஸ்., அளவும் குறைந்து வருவதால், அவற்றை ஓரத்துப்பாளையம் அணையில் சேமித்து விவசாயத்திற்குப் பயன்படுத்த விவசாயிகள் தற்போது கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவ்வப்போது சிறிய அளவில் முறைகேடாக இயங்கி வரும் சாய சலவைப்பட்டறைகள் ஜிரோ டிஸ்சார்ஜ் முறையினை பயன்படுத்தி நீரை சுத்திகரிக்காமல் நொய்யலாற்றில் திறந்து விட்டு வருகின்றனர். இன்று திருப்பூர் வளம் பாலம் அருகே இருந்த நொய்யலாற்று கரையினில் இளஞ்சிவப்பு நிறத்திலான சாயக்கழிவு நீர் கலந்து வந்தது. ஜின்னிங்க், பட்டன் நிறுவனம் ஏதேனும் அவை நிறமேற்ற பயன்படுத்திய தண்ணீரை சுத்திகரிக்காமல் வெளியேற்றியிருக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு கால்நடைகளுக்கு நோய் தாக்கம் ஏற்படும் எனவும், இதனை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.