கடந்த வாரம் தடை செய்யப்பட்ட மாத்திரைகளில் சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளின் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

பல்வேறு மருந்துகளின் கூட்டமைப்பில் உருவான 328 மருந்து, மாத்திரைகளை இந்தியாவில் விற்பனை செய்ய கடந்த வாரம் மத்திய அரசு தடை விதித்திருந்தது. மத்திய அரசின் தடைக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், முதற்கட்டமாக சாரிடான், டார்ட் வலி நிவாரணி, பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளுக்கும் விதிக்கப்பட்ட தடையை நீக்கி விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.