வார்டு வரையறை பணிகளால் உள்ளாட்சி தேர்தல் தாமதம் : அமைச்சர் எஸ்.பி., வேலுமணி விளக்கம்

நீலகிரி : தமிழகத்தில் வார்டு வரையறை செய்யும் பணிகள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது வருவதாக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி : தமிழகத்தில் வார்டு வரையறை செய்யும் பணிகள் நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது வருவதாக உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி., வேலுமணி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தின் 150-வது ஆண்டு விழா மற்றும் பழங்குடியினர் விழா இன்று உதகையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி., வேலுமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முன்னதாக, நீலகிரியின் முதல் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரிக்கஸ் நினைவாக 1847 ஆம் ஆண்டு பிரிக்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் மரம் நடும் விழாவில் கலந்துகொண்டார். 

இதனைத்தொடர்ந்து, உதகை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற விழாவில் நீலகிரி 150-வது ஆண்டை குறிக்கும் வகையில் லோகோ மற்றும் சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அம்மா இருசக்கர வாகனத்தினை பழங்குடியின பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி., வேலுமணி வழங்கினார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.ஆர். அர்ஜூணன், எ.கே., செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி. கோபாலகிருஷ்ணன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் அ. சாந்திராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பேசியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்கால கட்டிடங்களைப் பாதுகாக்க தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். உதகை ஏரியை புனரமைக்க ரூ. 5 கோடி நிதியுதவி அளிக்க தமிழக அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன் மீது பரிசீலனை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும். நீண்ட நாட்களாக பார்க்கிங் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். உதகை, குன்னூர் பேருந்து நிலையங்களை புனரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அவர் பேசினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி., வேலுமணி பேசுகையில், "பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் மாவட்டத்தின் எல்லைப் பகுதியான தெங்குமரஹாடா மக்கள் பயன்பெறும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டவும் ரூ. 9 கோடி நிதி தற்போதே ஒதுக்கப்படும். தமிழகத்தில் வார்டு வரையறைக்கும் பணி நடந்து வருவதால் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது," என்றார். 

முன்னதாக, பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், நிகழ்ச்சியில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...