தொடர் சங்கிலி பறிப்பு வழக்குகள் : கோவையைச் சேர்ந்த இரு இளைஞர்களுக்கு 6 ஆண்டுகள் சிறை

கோவை : தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவருக்கு, தலா 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை : தொடர் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த இளைஞர்கள் இருவருக்கு, தலா 6 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரத்தினபுரி காவல் நிலையத்திற்குட்பட்ட டாடாபாத் 3-வது வீதியில் 55 வயதான சுஜாதா என்ற பெண் அணிந்திருந்த 1.5 பவுன் நகையை பறித்த வழக்கு மற்றும் சேவா நகரில் பேராசிரியர் பெரியநாயகி என்பவர் அணிந்திருந்த 5.5 பவுன் நகையை பறித்து காயம் ஏற்படுத்திய வழக்கு என இரு வழக்கிலும் கோவையை சேர்ந்த ஆறுமுகம் (25), சேகர் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை கோவை 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்தது. 

இன்று வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, குற்றவாளிகள் இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 7,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் அடுத்தடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டு வந்த ஆறுமுகம், சேகர் மீது கோவையில் மற்ற காவல் நிலையங்களில் ஏராளமான வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...