நீலகிரி : கோத்தகிரியில் குடியிருப்பிற்குள் புகுந்து வீட்டுச் செல்லப் பிராணியான நாயினை, சிறுத்தை வேட்டையாடும் சி.சி.டி.வி., காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி : கோத்தகிரியில் குடியிருப்பிற்குள் புகுந்து வீட்டுச் செல்லப் பிராணியான நாயினை, சிறுத்தை வேட்டையாடும் சி.சி.டி.வி., காட்சிகள் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோத்தகிரி பகுதியில் வசித்து வருபவர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி சாமிநாதன். இவரது செல்லப்பிராணி கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை. எனவே, பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் அவர் சி.சி.டி.வி.,களை ஆராய்ந்து கொண்டிருக்கும் போது, அதில் இருந்த காட்சிகளைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அந்த வீடியோவில், இவர் செல்லமாக வளர்த்தி வந்த நாயினை, வீட்டு வளாகத்திற்குள் புகுந்து சிறுத்தை கவ்விச் சென்றது.
பின்னர், இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், குடியிருப்பு குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்து செல்லப் பிராணியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தால், கோத்தகிரி அரவேனு பகுதி மக்களுக்கு உயிர் பீதி ஏற்பட்டுள்ளது. எனவே, சிறுத்தையைக் கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.