கோவை : தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்படுவதாக சசிகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நூருல்லா, சையது அபுதாகிர் உள்ளிட்ட 9 பேரின் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில், ஏற்கனவே, வழக்கு விசாரணை முடிந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நிலையில், மீண்டும் விசாரணை என்ற பெயரில் என்.ஐ,ஏ., அதிகாரிகள் அலைக்கழிப்பதாகவும், மனரீதியாக துன்புறுத்துவதாகவும் கூறியுள்ளனர். இதனால், தங்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளனர்.
மேலும், என்.ஐ.ஏ., விசாரணை குழு அதிகாரியான சவுகத் அலி உள்ளிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.