கோவை : சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் மேல்நிலை தொட்டி மற்றும் மாற்று திறனாளிகளின் கழிப்பறையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடக்கோரி சமூக ஆர்வலர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று சமூக ஆர்வலரான ஜெகநாதன் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், கூறியிருப்பதாவது :- நாகராஜபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டப்பட்டது. அது இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடாத காரணத்தால் பழுதடைந்து உள்ளது. இதேபகுதியில், 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்று திறனாளிகளுக்கு கட்டித் தரப்பட்ட கழிப்பறை பயன்பாடின்றி பராமரிக்கப்படாத காரணத்தால், அங்கு சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருகிறது.
மேலும், மக்கள் பணத்தில் கட்டப்பட்ட மேல்நிலைத் தொட்டியையும், மாற்றுத் திறனாளிகளின் கழிப்பறையையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.