திருப்பூர்: தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருப்பூரில் நூற்றுக்கும் மேற்பட்டடோர் பெரியாரின் முகமூடி அணிந்து ஊர்வலம் சென்றனர்.

பெரியாரின் 140-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் இயக்கங்களின் கூட்டமைப்பினர் திருப்பூர் மாநகராட்சி முதல் ரயில் நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலை வரை ஊர்வலமாகச் சென்றனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், தந்தை பெரியாரின் முகமூடி அணிந்து ஊர்வலமாக வந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தாராபுரம் மற்றும் சென்னையில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை தமிழக அரசு உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.