சென்னை: நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் தமிழகத்தில் வளரவே முடியாது என்றும், இன்னும் பாதாளத்திற்கு தான் செல்வார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியை, அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் தினகரன் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் பேசியதாவது:-
நானும் இந்து மதத்தைச் சேர்ந்தவன் தான். ஒருவர் தான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மாற்று மதத்தவரை இழிவுபடுத்தி பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. எச்.ராஜா தானது கட்சியை தமிழகத்தில் வளர்க்க முடியாத விரக்தியில் அவ்வாறு பேசி வருகிறார். தற்போது உயர் நீதிமன்றத்தை தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.
இப்படியான மன நிலையை உடையவர் தனது கட்சியை வளர்க்க முடியாது. ஏற்கனவே நோட்டாவுடன் போட்டி போடுகிறது அந்த கட்சி. இப்படியே போனால், கட்சி இன்னும் பாதாளத்திற்கு தான் செல்லும். மதவெறியைத் தூண்டுபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை.
தற்போதைய அரசு மத்திய அரசுக்கு அடிமையாக செயல்படுகிறது. நீதிமன்றம் கண்டித்துவிடும் என்று தான் தற்போது எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பயத்தில் இருக்கின்றனர்.
என்று அவர் பேசினார்.