நீலகிரி: முறையாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து டேன்டீ தோட்ட தொழிலாளர்கள் குன்னூர் டேன்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டேன்டீ தோட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் சரியாக ஊதியம் வழங்காததைக் கண்டித்தும், பச்சை தேயிலை பறிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதை கண்டித்தும் தொழிலாளர்கள் குன்னூர் டேன்டீ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிற்சாலையில் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 7 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். முதற்கட்டமாக தற்போது 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு ஏற்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.