கோவை: சென்னை மற்றும் திருப்பூரில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெரியாரின் 140-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் உள்ள அவரது சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில். சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை மீது ஒரு நபர் காலணியை வீசினார்.
பின்னர் அவருக்கு எதிராக கோஷம் எழுப்பினார். அவரை உடனடியாக போலீசார் பிடித்து கைது செய்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதே போல், திருப்பூர் பெரியார் திடல் பகுதியில் உள்ள பெரியார் சிலைமீது காலணி மற்றும் செங்கல் வைக்கப்பட்டது. இது பெரியார் தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
இந்த சம்பவத்தை அடுத்து கோவை மாநகரில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு செய்ய மாநகர காவல் துறை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் கோவை மாநகரில் உள்ள புலியகுளம், வெள்ளலூர், சுந்தராபுரம், காந்திபுரம், ஆத்துப்பாலம், சுண்ணாம்பு கால்வாய் போன்ற பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.