சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக அம்மாநிலமே நிலைகுலைந்து போனது. தற்போது அம்மாநில மக்கள் மெல்ல மெல்ல மீண்டு வருகின்றனர். இந்த பேரிடர் காரணமாக கடந்த 55 நாட்களுக்கு முன்பு சபரிமலை சன்னிதானம் மூடப்பட்டது. இந்த நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக கோவில் நடை இன்று மாலை திறக்கப்படும் என்று கோவில் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:-
உணவு, தண்ணீர் பிரச்சினை உள்ளதால், தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் ஊர் திரும்பிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார், தொடர்ந்து ஆழி குண்டத்தில் தீ வளர்க்கப்படும்.
இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும், நாளை அதிகாலை 4.00 மணிக்கு நெய் அபிஷேகம் துவங்கும். வரும் 21-ம் தேதி இரவு 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். தினமும் படி பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும், தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜைகளை நடத்துவார்.
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.