சென்னை: உயர் நீதிமன்றம் குறித்து தரக்குறைவான முன்வைத்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: உயர் நீதிமன்றம் குறித்து தரக்குறைவான முன்வைத்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது போலீஸ் மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராகவும், தரக்குறைவாக விமர்சித்தும் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா எச்.ராஜா கடுமையாக சாடிப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து, திருமயம் காவல் நிலையத்தில் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்
அவர் மீது நடவடிக்கை வேண்டி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவின் மீதான விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வு இன்று தொடங்கியது. அப்போது நீதிபதிகள், "உயர் நீதிமன்றத்தை கீழ்த்தரமாய் விமர்சிப்பதை ஏற்க முடியாது. இது தொடர்பாக, எச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்." என்று உத்தரவிட்டனர்.