கோவை: கல்லூரி நிர்வாகம் தங்களை ஏமாற்றுவதாகக் கூறி கோயம்புத்தூர் மெரைன் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

அக்கல்லூரி மாணவர்கள் 400 பேர் கல்லூரி வளாகத்தில் திரண்டு நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கல்லூரி நிர்வாகம் தங்களுக்கு இருப்பிட, உணவு வசதி செய்து தருவதில் குளறுபடி செய்வதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இது குறித்து மாணவர்கள் கூறுகையில், "மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரூ.50 ஆயிரம் பணத்தை கல்லூரிக்கு கட்டணமாக செலுத்துகிறோம். ஆனால், இருப்பிட வசதியும் உணவும் அவ்வளவு சுகாதாரமாக இல்லை. கடந்த ஒரு வருடமாக இது தொடர்கிறது. புத்தகம் இல்லாமல் வகுப்புக்குள் நுழைந்தால் அபராதம் விதிக்கின்றனர்.

ஆனால், ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தியும் புத்தகங்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்த கல்லூரியின் முதல்வர் யார்? என்றே எங்களுக்குத் தெரியாது. மூன்று முதல்வர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பிரச்சனைகளை யாரிடம் கூறுவது என்பது தெரியவில்லை." என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.