கோவை: இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக கோவையில் கைதான 5 பேரிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர்களை மீண்டும் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.

கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், சக்தி சேனா அமைப்பின் தலைவர் அன்புமாரி ஆகியோரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக சென்னையைச் சேர்ந்த இஸ்மாயில், சலாவூதீன், ஜாபர்சித்திக், சம்சூதீன் ஆகியோரையும், கோவையைச் சேர்ந்த ஆசிக் என்பவரையும் கடந்த 3-ம் தேதி கோவையில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, அவர்கள் மீது யு.ஏ.பி.ஏ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி அனுமதி வழங்கியது.

தொடர்ந்து அவர்களிடம் கடந்த 4 நாட்களாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை நிறைவடைந்த நிலையில் 5 பேரையும் முதலாவது மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை நாளை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, அவர்கள் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் பின்னர் கைது செய்யப்பட்ட அன்வர், பைசல் என்ற இருவரையும் தனியாக காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.