கோவை: பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட் ஒன்றை திருடிய நபர், தனது ஹெல்மெட்டை அந்த வாகனத்தில் வைத்துச் சென்றுள்ளார்.
கோவை: பொள்ளாச்சியில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட் ஒன்றை திருடிய நபர், தனது ஹெல்மெட்டை அந்த வாகனத்தில் வைத்துச் சென்றுள்ளார்.
பொள்ளாச்சி கெட்டிமல்லன் புதூரை சேர்ந்தவர் தண்டபாணி. கடந்த 14-ம் தேதி பொள்ளாச்சி மீன்கரை சாலையில் உள்ள ஆல்வா மருத்துவமனையில் ஒரு நோயாளியை பார்க்க சென்றார்.
திரும்பி வந்து பார்த்த போது தனது வாகனத்தில் இருந்த ஹெல்மெட் மாறியிருப்பது தெரியவந்தது. மருத்துவமனையின் நிர்வாகத்தின் மூலம் கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது, ஒரு நபர், தனது பழைய ஹெல்மெட்டை, தண்டபாணியின் வாகனத்தில் வைத்துவிட்டு புத்தம் புதிய ஹெல்மைட்டை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இந்த திருட்டு தொடர்பாக தண்டபாணி போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளார்.
ஹெல்மெட்டை திருடும்போது நேர்மையை கடைபிடித்திருக்கிறார் என்று வலைதளங்களில் இந்த வீடியோ நகைப்புக்குரியதாய் இருந்தாலும், சமீப காலமாக தொடர்ந்து ஹெல்மெட் கொள்ளை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.