சென்னை: பா.ஜ.க., தேசிய செயலாளர் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது போலீஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவைக்கு எதிராக எச்.ராஜா கடுமையாக சாடி பேசினார்.
இதனைத் தொடர்ந்து, திருமயம் காவல் நிலையத்தில் அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், அவர் தற்போது தலைமறைவாக உள்ளார்.
அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சென்னை அண்ணா சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அக்கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு எச்.ராஜாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.