கோவை: கடந்த சில மாதங்களாகவே கோவை விமான நிலையத்தில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்கள் கோவையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருக்கும், டெல்லிக்கும், ஹைதராபாத்துக்கும் புதிய விமான சேவைகளை தொடங்கின.
அந்த வரிசையில் தற்போது கோவையில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவையை (Airbus A320 ) தொடங்குகிறது இண்டிகோ நிறுவனம்.
இந்த விமானம் கோவையில் இருந்து இரவு 8.10-க்கு புறப்பட்டு 9.00 மணிக்கு சென்னை சென்றடையும். இதோடு, 6 விமான சேவையை கோவையில் இருந்து இயக்குகிறது இந்த நிறுவனம்.
இது குறித்து, விமான பயணி ஒருவர் கூறுகையில், "வெளிநாட்டு விமானங்கள் இரவு அல்லது அதிகாலையிலேயே இருக்கும், தற்போது வந்த இந்த புதிய விமானம் மூலம் இரவு எளிதில் சென்னை சென்றடைந்து அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்ல முடியும்." என்றார். இந்த விமானத்தில் 180 பேர் அமர்ந்து பயணிக்க முடியும்.