புது மாப்பிள்ளைக்கு 5 லிட்டர் பெட்ரோலை பரிசாக அளித்த நண்பர்கள்

கடலூர்: பெட்ரோல் விலை வரலாறு காணாத ஏற்றத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் திருமண தம்பதியினருக்கு பெட்ரோலை பரிசளித்த சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர்: பெட்ரோல் விலை வரலாறு காணாத ஏற்றத்தில் சென்று கொண்டிருக்கும் வேளையில் திருமண தம்பதியினருக்கு பெட்ரோலை பரிசளித்த சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே உள்ள கீழபருத்திக்குடி கிராமத்தைச் சேர்ந்த இளஞ்செழியன் என்பவருக்கும் நாகை மாவட்டம் செம்பியவேலன்குடி கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆசிரியை கனிமொழிக்கும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குமராட்சியில் உள்ள அன்னை கோகிலாம்பாள் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு வந்த உறவினர்களும், நண்பர்களும் மண மக்களுக்கு பல்வேறு பரிசுகளை அளித்து வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருந்தனர். அப்பொழுது மாப்பிள்ளை இளஞ்செழியனின் சென்னையைச் சேர்ந்த நண்பர்கள் ஒருங்கிணைந்து 5 லிட்டர் பெட்ரோலை வாங்கி அதனை கேனோடு மணமேடையில் இருந்த மணமக்களுக்கு பரிசு அளித்துள்ளனர்.

திருமண தம்பதிக்கு பெட்ரோல் கேனை பரிசளித்த பார்த்த திருமணத்திற்கு வந்தவர்கள் குழம்பினார்கள். தம்பதிகளும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் முழித்துள்ளனர். இதனைப் பார்த்த பரிசளித்த நண்பர்கள் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை கடுமையாக ஏறி வரும் நிலையில் பரிசு பொருளாக பெட்ரோல் கொடுத்தால் புது மண தம்பதிகளுக்கு உபயோகமாக இருக்கும் எனக் கொடுத்தோம் என கூறியுள்ளனர். 

இதனைக் கேட்ட திருமண தம்பதிகள் உட்பட அனைவரும் ஆச்சரியத்துடன் சிரித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் சிறிது நேரம் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் பெட்ரோல் விலை குறித்தும், அதனை பரிசாக வழங்கியது குறித்தும் பரவலாகப் பேசினார்கள்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...