திருப்பூர் : திருப்பூரில் இந்து முன்னணி சார்பில் கடந்த 3 தினங்களாக பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

திருப்பூர் மாநகர மாவட்ட இந்து முன்னணி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 2000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டன. திருப்பூர் மாநகரப்பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 1000க்கும் அதிகமான சிலைகள் பல்வேறு பகுதிகளில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டன.

பின்னர், அங்கிருந்து திருப்பூரின் முக்கிய வீதிகள் வழியாகக் கொண்டு செல்லப்பட்ட சிலைகள் திருப்பூர் மங்களம் சாலையில் உள்ள சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்காக கொண்டு செல்லப்பட்டன.