புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது போலீஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவைக்கு எதிராக அவதூறு பேசிய எச் ராஜாவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது போலீஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவைக்கு எதிராக அவதூறு பேசிய எச் ராஜாவை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.
திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக பெறப்பட்ட புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை கைது செய்ய ஆய்வாளர் மனோகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும், ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவர் தற்போது தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.