திருப்பூர்: திருப்பூரில் இன்று பெய்த மழைக்கு அனைப்பாளையம் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய சாக்கடை நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு கடும் துர்நாற்றம் வீசியது.

கல்லூரி சாலையானது வஞ்சிபாளையம் பிரதான சாலையை சென்றடையும் சாலையாகவும், அனைப்பாளையம் பாலத்திற்குள் சென்றால் ஆண்டிபாளையம் மற்றும் மங்கலம் சாலையை தொடும் பிரதான சாலையாக உள்ளது.
அந்த சாலையில் உள்ள அனைப்பாளையம் சோதனை சாவடி மிகவும் தாழ்வான பகுதியாக உள்ளது. அந்த பகுதியை சுற்றிய ரங்கநாதபுரம் அனைப்பாளையம் சிறுபூலுவபட்டி போன்ற பகுதிகளிலிருந்து வரும் பிரதான சாக்கடை கால்வாய் செல்வதால் சிறிய அளவிற்கு மழை பெய்தால் கூட அங்குள்ள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர்கள் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் பிரதான சாலையான கல்லூரி சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் வேலைக்குச் செல்பவர்களும், பள்ளி கல்லூரிக்கு செல்பவர்களும் அந்த சாலையை அதிகப்படியான பயன்படுத்துவதால் சாலையில் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடும் பொழுது சுமார் 2 மணி நேரம் வரை கடுமையான போக்குவரத்து நெருக்கடி மற்றும் கடுமையான துர்நாற்றம் ஏற்படுகிறது.
இது சமந்தமாக பல முறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று குமுறும் மக்கள், உடனடியாக அந்த சாலையில் உள்ள சாக்கடையை முறையாக தூர்வாரி மழைக் காலங்களில் வாகன ஓட்டிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.