கோவை: வனத்துறையில் காலியாக இருக்கும் 80 சதவீத வனக்காவலர்கள் பணியிடங்களுக்கு வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேட்டைத்தடுப்பு காவலர்கள் சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழா நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட வேட்டைத்தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது, வனத்துறையில் காலியாக இருக்கும் 80 சதவீத வனக்காவலர்கள் பணியிடங்களுக்கு வேட்டைத் தடுப்பு காவலர்கள் நியமிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தொடர்ந்து, காப்பீடு மற்றும் இதர படி செலவினங்களை அரசு வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள், காலணிகள், பாம்பு பிடிக்கும் குச்சிகள், விளக்குகள் தர வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த விழாவில், சங்கத்தின் மாவட்ட தலைவர் ரங்கராஜ், மாநில துணை தலைவர் சரவணக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.