சென்னை: சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை காசிமேட்டில் விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற போது அங்கு திடீரென மோதல் ஏற்பட்டது. ஊர்வலம் சென்றவர்கள் தங்களுக்குள்ளேயே திடீரென மோதிக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோதலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், மோதலை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடர்ந்து, தடியடி நடத்தப்படும் என்று போலீசார் அறிவித்தனர். இதன் பின்னர், மோதலில் ஈடுபட்டவர்கள் கலந்து சென்றனர்.
இரு பிரிவுகள் இடையே மேளதாளங்கள் இசைப்பதில் இந்த மோதல் ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோதல் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.