புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க., தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, உயர் நீதிமன்றம் குறித்து கீழ்த்தரமாக பேசியது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

எச்.ராஜா-வின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அவர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை செய்வதாகவும், கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் இன்று காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், உயர் நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில், புதுக்கோட்டை திருமயம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.