கோவை: மேட்டுப்பாளையத்தில் உள்ள பெள்ளாதி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பெள்ளாதி குளம். சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் உள்ள இக்குளம் வறட்சி காலத்திலும் வற்றாமல் நீர் நிறைந்தே காணப்படும். விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இருபதிற்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இதுவே முக்கிய நீராதாரம்.

திப்புசுல்தான் காலத்திலேயே இக்குளத்து நீரை அருகில் உள்ள கிராமங்கள் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் நீர் மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், எப்போதும் நீருடன் ஒரு ஏரி போல் காட்சியளிக்கும் இந்த குளத்தில் உள்ளூர் மட்டுமின்றி அந்தந்த பருவ காலங்களில் வெளிநாட்டு பறவைகளும் தேடி வரும் என்பதோடு மான்கள் உள்ளிட்ட சிறிய வன உயிரினங்களும் தாகம் தீர்க்க இக்குளத்தை நாடி வருவது வழக்கம்.
ஆனால், கடந்த சில காலமாகவே இக்குளத்தில் இருந்து சட்டவிரோதமாக மண் அள்ளப்படுவது கரையோரத்தில் உள்ள மணல் கடத்தப்படுவது, இதன் கரைப்பகுதிகள் மற்றும் நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது என பல்வேறு விதி மீறல்கள் நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டும் இப்பகுதி மக்கள், இதனால் பெள்ளாதி குளத்தின் இயற்கை தன்மை பாழ்பட்டு வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது முற்றிலும் விதிகளுக்குப் புறம்பாக குளத்தின் கரையை பலவீனப்படுத்தும் வகையில் அதன் அருகிலேயே பெரிய பொக்லைன் இயந்திரத்தின் உதவியோடு வழித்தடப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலரின் சுயலாபத்திற்காக குளக்கரை அரிக்கப்பட்டு கரையை சுற்றியுள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் இந்த பாதை ஆக்கிரமித்து போடப்படுவதாக புகார் தெரிவிக்கும் மக்கள், மழைக்காலங்களில் குளக்கரை உடைந்தால் சுற்றுவட்டாரத்தில் உள்ள பதினைந்திற்கும் மேற்பட்ட கிராமங்கள், விவசாய விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படும் என அச்சம் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
மேட்டுப்பாளையம், தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு குளங்கள், குட்டைகள் மற்றும் நீராதாரங்கள், நீர்வழி பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டும், மண் மற்றும் மணல் கடத்தப்பட்டும் பாழாக்கப்பட்டு வருவதாகவும், இதனால் வரும் காலங்களில் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டி வரும் எனவும் எச்சரிக்கின்றனர்.

மக்கள் போராட்டத்தை தொடர்ந்து சாலை அமைக்கும் பணியினை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், பாதை அமைப்பு பணிகள் சட்ட விரோதம் என்றும், நீர் வழித்தடங்கள் மற்றும் நீராதாரங்களான குளம் குட்டைகளை பாதுகாக்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், மீண்டும் இது போன்ற சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைத்தனர். தற்போது அந்த அறிவிப்பு பலகையும் கிழித்து எரிந்துள்ளனர் சில சமூக விரோதிகள்.
தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் இவர்களை கண்டறிந்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள பெள்ளாதி மக்கள். கடந்த மாதம் பெய்த கனமழை மற்றும் பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை பகுதிகள் நீரில் மூழ்கி பெரும் சேதங்கள் உருவானது. இதற்கு நீர் செல்லும் பாதைகள் மறிக்கப்பட்டதே என கூறும் பொதுமக்கள், இது போன்ற விதிமீறல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.