திருப்பூர்: கருணாநிதி பற்றிய கவலையில் உயிரிழந்த தி.மு.க., தொண்டர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பாப்பான்குளம் ஊராட்சியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். தி.மு.க., பகுதி கழக செயலாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த ஜூலை மாதம் 29-ம் தேதி தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த செந்தில்குமார், மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்தநிலையில், அவரது மனைவி செல்வியிடம் ரூ.2 லட்சத்திற்கான காசோலை நிவாரணமாக இன்று வழங்கப்பட்டது. மாநில இளைஞரணி செயலாளர் மு.பெ.சாமிநாதன், மாவட்ட செயலாளர் பத்மநாபன், சட்டமன்ற உறுப்பினர் இரா.ஜெயராமகிருஷ்ணன் மாவட்ட பொருளாளர் முபாரக்அலி ஆகியோர் ரூ.2 லட்சத்திற்கான காசோலையை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்