நீலகிரி: நீலகிரியில் இரண்டாம் சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப்பயணிகளுக்காக உதகை முதல் கேத்தி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
நீலகிரி: நீலகிரியில் இரண்டாம் சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலாப்பயணிகளுக்காக உதகை முதல் கேத்தி வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
யுனஸ்கோ அங்கிகாரம் பெற்ற மலைரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். இந்நிலையில், இரண்டாவது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கேற்ப, உதகையிலிருந்து கேத்தி வரை ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை மற்றும் மதியம் என இரண்டு முறை இயக்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கும், மதியம் 2.30 மணிக்கும் இந்த சிறப்பு மலைரயில் சேவை உதகையில் இருந்து இயக்கப்படுகிறது.
இதற்கான முதல் வகுப்பு கட்டணம் ரூ.450-ம், இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ.300-ம் வசூலிக்கப் படுகிறது. இந்த சிறப்பு மலை ரயில் சேவையால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.