சென்னை: புதுக்கோட்டையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க., தேசிய செயலாளர் எச் ராஜா, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது, உச்ச நீதிமன்றம் குறித்து கீழ்தரமாக பேசியது வீடியோவாக வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

இந்நிலையில், இது தொடர்பான கேள்விக்கு இன்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், "எச்.ராஜா நீதிமன்றம் மற்றும் போலீசார் குறித்து பேசியது கண்டிக்கத்தக்கது. அவர் மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்த பின் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என கூறினார்.