கோவை : மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவானியாற்றில் கரைக்கப்பட்டது.
கோவை: மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பவானியாற்றில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருநூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. இந்த சிலைகள் அனைத்தும் இன்று மேட்டுப்பாளையம் நகர முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பவானி ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் அரசு போக்குவரத்து கழகம் அருகே தொடங்கிய இந்த விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் செண்டை மேளம் முழங்க புறப்பட்டது. வாகனங்கள் மூலம் வரிசையாக எடுத்துச் செல்லப்பட்ட இந்த ஊர்வலத்தில் கேரளாவை சேர்ந்த நடன கலைஞர்கள் கடவுள் உருவங்களில் வேடமிட்டு பங்கேற்றது பார்வையாளர்கள் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது. இன்று மாலை நடைபெற்ற இந்த விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு ஐநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

பெரும்பாலான விநாயகர் சிலைகள் 12 அடி உயரம் வரை இருந்ததால் சிலைகள் அனைத்தும் பவானியாற்றில் வரிசையாக எடுத்து செல்லப்பட்டு எளிதில் கரைக்கும் விதமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.