கோவை : வெளிமாநிலங்களில் இருந்து போதை மருந்துகளைக் கொண்டு வந்து, கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவை: வெளிமாநிலங்களில் இருந்து போதை மருந்துகளைக் கொண்டு வந்து, கோவையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்ட 4 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் கடந்த சில மாதங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் வெளியூரிலிருந்து போதை ஊசி மருந்துகளை வாங்கி வந்து கோவையில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, கடந்த ஜுலை மாதம் 24-ம் தேதி காந்திபுரம் 2-வது வீதி சக்தி சாலை சந்திப்பில், சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஜாய் இமானுவேல், சிஹாப் என்ற முகமது சிஹாப், ஜூல்பி என்ற ஜுல்பிகார் அலி, அனாஸ் என்ற முகம்மது அனாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெங்களூரு மற்றும் வெளியூர்களில் இருந்து போதை ஊசி மருந்துகளை வாங்கி வந்து கோவை மாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ மாணவிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களிடம் இருந்து டையாஷீபேம் மற்றும் பெத்திடைன் ஹைட்ரோகுளோரைடு, போதை ஊசி போட பயன்படுத்தும் காளி சிரஞ்சீவி ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மேலும், குற்றவாளிகள் மீது சி1 காட்டூர் காவல்நிலையத்தில் என்.பி.டி.ஸ்., பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட முகமது சிஹாப் கோவை நீதிமன்றத்தில் போலி மருத்துவச் சான்றிதழ் கொடுத்து ஜாமீன் பெற முயற்சி செய்து, அதில் சம்மந்தப்பட்ட வழக்கறிஞர் மற்றும் மருத்துவர்கள் உட்பட அனைத்து நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சிறையில் உள்ள ஜாய் இமானுவேல், முகமது சிஹாப், ஜுல்பிகர் அலி, முகம்மது அனாஸ் ஆகியோர்களை தமிழ்நாடு குண்டர் தடுப்பு சட்டம் 14/1982 பிரிவின்படி தடுப்பு காவலில் வைக்க கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, இன்று முதல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் குற்றவாளிகள் சிறையில் இருப்பார்கள் என்ற நகல் சிறைக்கு அனுப்பப்பட்டது.