கோவை : பொதுத்தேர்வுகளில் தோல்வியடைந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், பறவையியல் துறை தொடர்பான பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்து, கல்வியைத் தொடராத மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஆனைகட்டியில் உள்ள சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாறு மையம் ஒரு சிறப்புப் பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் ஒரு அங்கமான சுற்றுச்சூழல் தகவல் அமைப்பின் மூலம் பசுமை திறன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் 10 நாட்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும் இந்த வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு பறவைகள் அடையாளம் காணுதல் மற்றும் பறவையியல் துறை குறித்து கற்றுத் தரப்படுகிறது. அனுபமிக்க பறவையியல் துறை வல்லுநர்களால், கள ஆய்வு, சத்தத்தின் மூலம் பறவைகளை வகைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கிறது.
இந்த வகுப்பில் சேர்ந்த பயிற்சி பெற்றவர்களுக்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், சலீம் அலி மையத்திற்கு 10 நாள் பயிற்சிக்கு வருபவர்களுக்கு உணவு, தங்குமிடம் அளிக்கப்படுகிறது. இதில், பள்ளி பொதுத்தேர்வில் தோல்விடையந்தவர்கள் மட்டுமின்றி பட்டப்படிப்பு முடிந்தவர்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பயிற்சியாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.