சேலம்: சேலம் ரயில்வே கோட்ட ரயில் நிலையங்களில் 15 நாட்கள் நடக்கும் ‘ஸ்வச்ச ஹாய் சேவா பக்வாரா-2018’ என்ற தூய்மை பிரச்சாரத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் இன்று தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் ‘ஸ்வச்ச ஹாய் சேவா பக்வாரா-2018’ என்ற தூய்மை பிரச்சாரம் 15 நாட்களுக்கு மேற்கொள்ளப்படுகிறது. சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தூய்மை பிரச்சாரத்தை சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் இன்று தொடங்கி வைத்தார்.

தூய்மையை வலியுறுத்தும் பேரணியை தொடங்கி வைத்த அவர், ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகளிடம் தூய்மையை பேணிக் காப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினார். பேரணியில் முதுநிலை வணிக மேலாளர் விஜூவின், முதன்மை இயந்திரவியல் பொறியாளர் முத்துகுமார், நிலைய மேலாளர் கவுரி சங்கர், முதன்மை வணிக ஆய்வாளர் விக்ரமன் உள்ளிட்ட அதிகாரிகள் ரயில்வே ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பாகப் பணியாற்றியமைக்காக துப்புரவு பணியாளர்கள் 30 பேருக்கு தலா ரூ. 200-ஐ ரொக்கப் பரிசாக கோட்ட மேலாளர் சுப்பாராவ் வழங்கி பாராட்டினார்.

15 நாட்கள் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பிரச்சாரத்தில் ரயில்வே ஊழியர்கள் அவர்களது வாழ்விடத்தின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருத்தல், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் மூலமாக தூய்மை பிரச்சாரம், கருத்துப்பட்டறை உள்பட ஒவ்வொரு நாளும் ஒரு கருப்பொருளில் தூய்மை பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
பின்னர், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் நிருபர்களிடம் கூறியதாவது :- சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட சேலம், கோவை ,ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் வரும் அக்டோபர் 2-ம் தேதி வரை 15 தினங்களுக்கு தூய்மை இந்தியா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது தான் இதன் நோக்கம்.

சேலம் - மேட்டூர் இடையே அமைக்கப்பட்டு வரும் இரட்டை ரயில்பாதை பணி வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும். பணியை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் இரட்டை ரயில்பாதை பணி முடிவடைந்தால், மேட்டூர் அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரியை எளிதாக கொண்டு செல்ல முடியும். இதற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னரே மத்திய ரயில்வே அமைச்சகம், திட்டம் அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தது.

சேலம் ஜங்ஷன் ரயில்நிலைய 2-வது நுழைவாயில் பகுதியில் பயணிகள் சுரங்கப்பாதை, அலுவலக கட்டிடம் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு கார் பார்க்கிங் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த பரிந்துரையை தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு அனுப்பி இருக்கிறோம். அங்கிருந்து தகவல் கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.