கோவை மாநகராட்சி 'பசுமை அங்காடி'க்கு சமூக நலத்துறை அதிகாரிகள் பாராட்டு

கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இயங்கி வரும் பசுமை அங்காடியை சென்னை சமூக நலத்துறை, கூட்டு இயக்குநர் டாக்டர்.ஷெரின் தலைமையிலான குழுவினர் நேற்று பார்வையிட்டு, இயற்கையைப் பாதிக்காத தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வரும் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

சுற்றுச்சூழலைப் பாதிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக துணிப்பைகள், மூங்கில் உருஞ்சிகள், காகிதப் பைகள், தண்ணீரில் கரையும் பைகள் என இயற்கை வளங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பல்வேறு வகையான பசுமை பொருட்கள் மாநகராட்சி பசுமை அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன. சமீபத்தில் மரக்கன்றுகள் வைக்கப்படும் கருப்பு நிற பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பருத்தியால் நெய்யப்பட்ட துணிப்பைகள் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பைப் பெற்றன.

இவற்றை பார்வையிட்ட சென்னை சமூக நலத்துறை, கூட்டு இயக்குநர் டாக்டர்.ஷெரின் மற்றும் கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள், மாநிலத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் கலப்பு இல்லாத பசுமை தயாரிப்புகளை ஊக்குவித்து வரும் கோவை மாநகராட்சியையும், பல்வேறு பசுமை பொருட்களை தயாரித்து வரும் குழுவினரையும் பாராட்டினர்.

மேலும், இயற்கையை பாதிக்காத காட்டன் பைகள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மகளிர் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...