கோவை: மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் வரும் 21-ம் தேதி பிங்கத்தான் மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.

5 கி.மீ., தொலைவு ஓடக் கூடிய இந்தப் போட்டி நாடு முழுவதும் வரும் 21-ம் தேதி நடத்தப்படுகிறது. குறைந்தது 5 நாடுகளில் 50-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் குறைந்தபட்சம் 5,000-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் சூப்பர் மாடலான மிலின் சோமனால் கடந்த 2012-ம் ஆண்டு முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்பட்டது. இந்த மாரத்தானின் நோக்கமே, பெண்களிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பெண்கள் உடல் வலிமை பெறவும், அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதே ஆகும்.
இந்த பிங்கத்தான் மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்புவோர் https://www.pinkathonday.com என்ற வலைதள முகவரியின் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும்.