நீலகிரி : குன்னூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2-வது நாளாக பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த தென்மேற்கு மழையின் தாக்கம் கூடலூர் பகுதியில் அதிகம் காணப்பட்ட நிலையில், உதகை, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கொலக்கம்பை போன்ற பகுதிகளில் குறைந்தே காணப்பட்டது. இதனிடையே, வடகிழக்கு மழையின் தாக்கம் குன்னூர் பகுதியில் அதிகம் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கடந்த சில நாட்களாக குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது, மூடுபனியும் உருவானது.
இந்த நிலையில், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் திடீரென பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து, 2-வது நாளாக இன்றும் அங்கு மழை வெளுத்து வாங்கியது. சில மணிநேரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஆறுகள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது