கோவை : குனியமுத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.
கோவை : குனியமுத்தூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணியின் சார்பில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரைஸ் மில் சாலையில் தொடங்கிய ஊர்வலமானது குனியமுத்தூர் சாலை வழியாக சென்று குறிச்சி குளத்திற்கு வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் மொத்தம் 14 விநாயகர் சிலைகள் குனியமுத்தூர் குளத்தில் கரைக்கப்பட்டது. அதேபோல, இந்து முன்னணி சார்பில் 18 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட உள்ளது. இந்த விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு கோவை மாநகர காவல் துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.