திருப்பூர்: திருப்பூரில் மும்மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ விநாயகர் விசர்ஜன ஊர்வலம் அனைத்து தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை 3-ம் நாளான இன்று விசர்ஜன ஊர்வலமாக கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அப்பகுதியைச் சேர்ந்த இந்து, இஸ்லாமிய, கிருஸ்துவ மதங்களை சேர்ந்த மும்மதத்தினரும் பங்கேற்று சமத்துவ விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தை துவக்கி ஊர்வலமாக சென்றனர்.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்திய இந்த விசர்ஜன ஊர்வலம் அனைத்து தரப்பு மக்களின் வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த ஊர்வலத்தின் போது அதே பகுதியை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவன் பாரத், தப்பாட்ட குழுவினருடன் இணைந்து அவர்களது வேகத்திற்கு ஈடுகொடுத்து மேளம் இசைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மாணவனின் திறமையை அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.