நீலகிரி : கோத்தகிரி டேன் டீ குயின் சோலை தொழிலாளர்கள் பறித்து வந்த பசும் தேயிலை தரமில்லை எனக் கூறி நிர்வாகம் பீல்டுமேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, டேன்டீ அதிகாரிகளை தொழிலாளர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி: கோத்தகிரி டேன் டீ குயின் சோலை தொழிலாளர்கள் பறித்து வந்த பசும் தேயிலை தரமில்லை எனக் கூறி நிர்வாகம் பீல்டுமேலாளர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, டேன்டீ அதிகாரிகளை தொழிலாளர்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி குயின் சோலை டேன் டீ தொழிலாளர்கள் கடந்த திங்கட்கிழமை பறித்த தேயிலை தரமில்லை எனக் கூறி நிர்வாகம் திருப்பி அனுப்பியுள்ளது. மேலும், குயின் சோலை பீல்டு மேலாளரிடம் குயின் சோலை டேன் டீ நிர்வாகம் ரூ. 60 ஆயிரம் பிடித்தம் செய்வதாகக் கூறியது. இதனால் ஆத்திரடைந்த 120/105 டிவிசனைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகாரிகளை சிறைபிடித்து அலுவலகம் முன்பு வேலைநிறுத்தம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, டேன் டீ பொதுமேலாளர் விக்ரம் மற்றும் தொழிற்சங்க தலைவர் கருவெற்றிவேல் ஆகியோர் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், யாரும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதாக நிர்வாக தரப்பு உறுதி அளித்ததன் பேரில், தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பினர்.