நீலகிரி : உதகையில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனை மற்றும் தங்கமழை பரிசு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

தீபாவளி சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும், இன்று முதல் அடுத்த மாதம் 31-ம் தேதி வரை 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. தமிழகத்தின் காஞ்சிபுரம், கோவை, சேலம், ஆரணி, தஞ்சை போன்ற பல்வேறு பகுதிகளில் நெசவு செய்யப்படும் புதிய வடிவமைப்புகளுடன் கூடிய மென்பட்டு சேலைகள், உயர் ரக பருத்தி சேலைகள், கோவை காட்டன், கோரா காட்டன் சேலைகள், காரைக்குடி செட்டிநாடு காட்டன் சேலைகள், ஜெயம் கொண்டம் சேலைகள், ஏற்றுமதி ரகங்களான படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

உதகை விற்பனை நிலையத்தில் கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது, ரூ. 91.88 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு 110 லட்சம் ரூபாய் விற்பனை இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் துணிகளை வாங்கி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.